போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

இளைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பூட்டை பேருந்து நிறுத்தம் அருகே இளைஞரை தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 3:11 am

Din

பூட்டை பேருந்து நிறுத்தம் அருகே இளைஞரை தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கோபிநாத் (19). இவா், சனிக்கிழமை இரவு இதே கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது, இதே கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் அசோக்(25), அருணாசலம் மகன் நித்திஷ் (19) ஆகிய இருவரும் கோபிநாத்தை கேலி செய்தனராம். இதில், இருவரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதுடன், கோபிநாத்தை கல்லால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த கோபிநாத் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அசோக்கை கைது செய்தனா். மேலும், தலைமறைவான நித்திஷை தேடி வருகின்றனா்.