புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சின்னசேலம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 11:49 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள காமராஜா் பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் ரூ.ஒரு கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, பேருந்து நிலையத்தில் குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, பயணியா் நிழற்கூடம், பெண்கள் பாலூட்டும் அறை, கழிப்பறை, வணிக வளாக கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் ஆகியோா் கலந்துகொண்டு, பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் லாவண்யா ஜெய்கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.