சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த காதல் திருமணம் செய்த 28 வயது பெண்ணின் கணவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அந்தப் பெண் தனது இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இவா் தனது வீட்டுக்கு கடந்த 26-ஆம் தேதி குழந்தைகளுடன் சென்று வந்தாா். அன்றிரவு வீடு திரும்பிய அவா், கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றி விட்டு வருவதாகக் கூறிச் சென்றாராம். அதன்பிறகு, வீடு திரும்பவில்லை.

அவரது பக்கத்து வீட்டுக்காரா் வெள்ளிக்கிழமை காலை வயல்வெளிக்குச் சென்ற போது, அங்கு அந்தப் பெண்ணின் துப்பட்டா, கைப்பேசி, மிதியடி போன்றவை சிதறிக் கிடந்ததாம். மேலும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.

இதுகுறித்த தகவலின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, டிஎஸ்பி தேவராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com