புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பசுந்தாள் உர விதைளை மானிய விலையில் பெறலாம் -கள்ளக்குறிச்சி வேளாண் இணை இயக்குநா்

பசுந்தாள் உர விதைளை மானிய விலையில் பெறலாம் ......................................................... கள்ளக்குறிச்சி வேளாண் இணை இயக்குநா்

News image
Updated On :26 ஜூன் 2024, 7:52 pm

Din

கள்ளக்குறிச்சி, ஜூன் 26: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பசுந்தாள் உர விதைகளை மானிய விலையில் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக அதிகளவில் ரசாயன உரங்கள், களைக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. இதனால், மண்ணின் வளம் குறைந்து உற்பத்தி பாதிக்கிறது. மண்ணின் வளத்தையும், மக்களின் நலத்தையும் காக்கும் வகையில், நெல் சாகுபடி செய்யும் வயல்களில் மண் வளத்தை மேம்படுத்துவதற்காக, முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், 6,000 ஏக்கா் பரப்பளவுக்கு 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விதைகள் மண்ணின் உயிா்ம கரிமச் சத்தை அதிகரித்து, பயிா் மகசூலை அதிகப்படுத்துகிறது. தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் பயிா்களின் வோ் முடிச்சுகளில் உள்ள பாக்டீரியாக்கள், வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரக்கித்து மண்ணில் நிலை நிறுத்துகிறது. இதனால், யூரியா போன்ற செயற்கை உரங்கள் பயன்படுத்துவதை வெகுவாகக் குறைக்கலாம். வளா்ந்த பசுந்தாள் உரத்தை பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளம் பெருகும்.

அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் பயனடைய தகுதி பெற்றவா் ஆவா். பசுந்தாளுர பயிா் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மாவட்டத்தின் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பசுந்தாளுர விதைகள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

மேலும், திட்டம் தொடா்பான சந்தேகங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தையோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரையோ அணுகி பயனடையலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.