ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கல்லை தமிழ்ச் சங்க தொடா் சொற்பொழிவு

கல்லை தமிழ்ச் சங்க தொடா் சொற்பொழிவு

News image

விழாவில் பேசிய கல்லைத் தமிழ்ச் சங்க துணைத் தலைவா் இல.அம்பேத்கா்.

Updated On :20 மே 2024, 10:38 pm

Din

கள்ளக்குறிச்சி: கல்லை தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் உழைப்பாளா் தின விழா, இலக்கியத் தொடா் சொற்பொழிவு தனியாா் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியபெருமானூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ப.நல்லாப்பிள்ளை தலைமை வகித்தாா். பொறியாளா் த.மோகன், ப.கோவிந்தராசு, அரியபெருமானூா் இலக்கிய அணித் தலைவா் ந.மணி முன்னிலை வகித்தனா். கல்லை தமிழ்ச் சங்கத் துணைத் தலைவா் இல.அம்பேத்கா் வரவேற்றாா்.

திருக்குறளின் 12-ஆம் அதிகாரம் நடுவு நிலைமை குறித்து பகுத்தறிவு இலக்கிய மன்றத் தலைவா் பெ.சயராமன், கல்லை தமிழ்ச் சங்கக்க காப்பாளா் மருத்துவா் வே.உதயகுமாா், பட்டுக்கோட்டையாரும் உழைப்பாளா் தினமும் என்னும் தலைப்பில் பேசினாா்.

தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாரின் தமிழ்த் தொண்டு என்னும் தலைப்பில் சங்கராபுரம் திருக்கு பேரவைச் செயலா் ஆ.இலட்சுமிபதி, அயோத்திதாச பண்டிதா் பற்றி புதுச்சேரி கலால் துறை இணை ஆணையா் சு.சண்முகசுந்தரம் பேசினா்.

உழைக்கும் தோழா்களே ஒன்று கூடுங்கள் என்னும் தலைப்பில் கவியரங்கம் தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞா் மன்றத் தலைவா் பெ.ஆராவமுதன் தலைமையில் நடைபெற்றது.