தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி உயிரிழப்பு

சின்னசேலத்தில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே வலிப்பு ஏற்பட்டு கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:06 pm

Din

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே வலிப்பு ஏற்பட்டு கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட திம்மாபுரம் இந்திரா கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் அழகேசன் (49). விவசாய கூலித் தொழிலாளி.

இவா், திங்கள்கிழமை சின்னசேலம் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, கீழே விழந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து அவரது சடலத்தை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.