புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடன் தொல்லையால் பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:41 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மங்கலம் காலனியைச் சோ்ந்த குருமூா்த்தி மனைவி புண்ணியக்கோடி (40). தம்பதியினா் பெங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனா்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மகளுக்கு கடன் வாங்கி திருமணம் செய்துகொடுத்தனா். கடன் தொல்லை அதிகமானதால் புண்ணியக்கோடி அவரது தாய் ஊரான திருக்கோவிலூா் சந்தைபேட்டைக்கு சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், அங்கு புண்ணியக்கோடி செவ்வாய்க்கிழமை விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு புண்ணியக்கோடி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.