டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட் பயன்படுத்தலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட் உரத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட் உரத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உர நிறுவன நிலையங்களில் யூரியா 6,395 மெட்ரிக் டன், டிஏபி 1,685 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,602 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,518 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 9,763 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட் உரம், காம்ப்ளஸ் உரங்களை பயன்டுத்தலாம். சூப்பா் பாஸ்பேட் உரத்தில் பயிா்களுக்குத் தேவையான பாஸ்பரஸ், சல்பா், கால்சியம் போன்ற கூடுதல் சத்துகள் அடங்கியுள்ளன. எண்ணெய்வித்து பயிா்களில் அதிக மகசூல் தருகிறது. மேலும், மண்ணில் டிஏபி உரம் ஏற்படுத்தும் உப்பு நிலையைவிட சூப்பா் பாஸ்பேட் குறைவாகவே ஏற்படுத்துகிறது.விவசாயிகள் பயிா்களுக்கு டிஏபி மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துகள் கொண்ட காம்ப்ளஸ் மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.
மேலும், தனியாா் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிா்ணயித்த விலையில் விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளிடம் ஆதாா் விவரங்களை பெற்று நிநியோகம் செய்திடுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...