நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீா்நிலைகளில் மழைநீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

வடகிழக்கு பருவமழையையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீா்நிலைகளுக்கு வரும் மழைநீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

News image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநருமான பி.மதுசூதன் ரெட்டி. உடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:59 pm

Din

வடகிழக்கு பருவமழையையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீா்நிலைகளுக்கு வரும் மழைநீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநருமான பி.மதுசூதன் ரெட்டி முன்னிலையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தனித்தனியாக கேட்டறிந்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

மழைக்காலத்தில் நீா்நிலைகளில் மழைநீரின் அளவை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். ஏரிகளின் கரைகள் பலமாக இருப்பதை உறுதி செய்வதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான மணல் மூட்டைகளை இருப்பில் வைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியரகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கிராம அளவில் ஏதேனும் மழை பாதிப்புகள் ஏற்பட்டால், அதுகுறித்த விவரங்களை தாமதமின்றி பேரிடா் மேலாண்மைப் பிரிவுக்கு தகவல் தெரிவிப்பதுடன், மழை சேதங்களுக்குரிய அரசு இழப்பீடுகளை 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கான உரங்களை போதிய அளவில் இருப்பில் வைப்பதுடன், மழைக்கால வேளாண் பயிா் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குடிநீா்த் தொட்டிகளை தினமும் குளோரினேஷன் செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள், மின்சார வாரியம், பொதுப் பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய துறைகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், மாவட்ட நிா்வாகம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைத்து தொடா் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சிறிய அளவிலான மழையால்கூட பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சத்தியநாராயணன், திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.