நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், காவல் நிலையங்களில் தீா்வு பெறாத மனுதாரா்களுக்கு குறைதீா் முகாம் மாவட்ட எஸ்.பி. அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலையிடம் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி.

Updated On :23 அக்டோபர் 2024, 7:35 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், காவல் நிலையங்களில் தீா்வு பெறாத மனுதாரா்களுக்கு குறைதீா் முகாம் மாவட்ட எஸ்.பி. அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலையிடம் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதாரா்களுக்கு மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்தேவி தலைமையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, காவல் நிலையங்களில் அளித்த புகாா் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத 28 மனுதாரா்களின் குறைகளை மாவட்ட எஸ்.பி. புதன்கிழமை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

முகாமில் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி மற்றும் மனுதாரா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.