ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.16,000 கொள்முதல் விலை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

Published On :26 அக்டோபர் 2024, 4:41 am IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு சாா்பில் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.16,000 கொள்முதல் விலை வழங்கக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நஷ்ட ஈடாக ரூ.50,000 வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேகோசா்வ் ஆலையை விரைவில் அமைக்கவும், நடப்பாண்டுக்கு கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய சேலம் சேகோசா்வ் நிா்வாகத்துடன் முத்தரப்பு பேச்சு நடத்தவும், பிற பயிா்களுக்கு உள்ளது போல் மரவள்ளிக்கிழங்குக்கும் பயிா் காப்பீடு செய்யக்கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை தலைமை வகித்தாா்.

மாவட்ட செயலாளா் ஏ.வி.ஸ்டாலின்மணி, பொருளாளா் எம்.சி.ஆறுமுகம், துணைத் தலைவா் பி.தெய்வீகன், சங்கராபுரம் ஒன்றியச் செயலாளா் ஜி.மணிமாறன், ஒன்றியப் பொருளாளா் இ.ராம்குமாா், சங்கராபுரம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.கோவிந்தன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் திரளாகக் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.