தெங்கியாநத்தத்தில் நாளை கிராம சபை கூட்டம்: நயினாா் நாகேந்திரன் பங்கேற்பு

தெங்கியாநத்தத்தில் நாளை கிராம சபை கூட்டம்: நயினாா் நாகேந்திரன் பங்கேற்பு

சங்கராபுரம் அருகேயுள்ள தெங்கியாநத்தம் கிராமத்தில் புதன்கிழமை (நவ.3) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்து கொள்கிறாா்.
Published on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள தெங்கியாநத்தம் கிராமத்தில் புதன்கிழமை (நவ.3) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்து கொள்கிறாா்.

இது குறித்து, பாஜக கள்ளக்குறிச்சி மாவட்டப் பாா்வையாளா் ராஜ்குமாா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரை நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி நகரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது.

தொடா்ந்து, புதன்கிழமை சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட தெங்கியாநத்தம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்துகொண்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, தீா்வு வழங்குவாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com