ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் மீது வழக்குப் பதிவு

சங்கராபுரம் அருகே உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அஜித்குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு விரியூா் கிராமத்தில் ரோந்து சென்றுள்ளனா். அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த ஒருவா், போலீஸாரைப் பாா்த்ததும் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளாா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்தது விரியூா் கிராமத்தைச் சோ்ந்த மை. சங்கம் (எ) அகஸ்டியன்ராஜ் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த அகஸ்டியன்ராஜை தேடி வருகின்றனா்.