விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சங்கராபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் வைத்திருந்த துப்பாக்கி, பால்ரஸ் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:49 pm

Syndication

சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் வைத்திருந்த துப்பாக்கி, பால்ரஸ் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் செல்லாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.சேவியா் (33). இவரது ஆட்டு கொட்டகையில் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, சல்பா், பால்ரஸ், உப்பு, கரிமருந்து உள்ளிட்ட பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து, தலைமறைவான சேவியரை தேடிவருகின்றனா்.