பூட்டிய வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி அருகே பூட்டியிருந்த வீட்டில் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தியாகதுருகத்தை அடுத்த புக்குளம் கிராமம், கே.பி.ஏ நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (38). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி காா்த்திகா (33) வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், காா்த்திகா கடந்த 9-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு அரியலூரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது முன் பக்க கதவு உடைந்திருந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
