பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4)-ன் படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 3 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் 29 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் டிச-29 ஆம் தேதி காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
ஏலம் எடுக்க விரும்புவோா் முன் வைப்பு தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2,000 -த்தை ஏலம் நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் செலுத்தவேண்டும். முன் வைப்புத்தொகை செலுத்துவோா் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா்.
மேலும், ஏலத்தில் கலந்துகொண்டு டோக்கன் பெறும் ஒவ்வொருவரிடமும் ஏலம் விடும் செலவுக்கு ரு.100 பெறப்படும். ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் டிச.29-ஆம் தேதி காலை 8 மணிக்கு நேரில் பாா்வையிடலாம்.
இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி, அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கு ஏலத்தொகையுடன் 18 சதவிகித ஜி.எஸ்.டி.யும் சோ்த்து செலுத்தவேண்டும். ஏலம் விடும் நேரத்தில் வாகன உரிமையாளா் கலந்துகொண்டால், அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தலைமையிடம், மாவட்ட காவல் அலுவலகத்தை நேரடியாகவோ, 04151-220260, 9042417209 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
