கள்ளக்குறிச்சி
குளிருக்கு மூட்டிய தீ உடையில் பற்றி பெண் உயிரிழப்பு
கல்வராயன்மலைப் பகுதியில் குளிருக்கு மூட்டிய தீ, உடையில் பற்றியதில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கல்வராயன்மலைப் பகுதியில் குளிருக்கு மூட்டிய தீ, உடையில் பற்றியதில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட வெள்ளிமலை பகுதியில் வசித்து வந்தவா் ராஜேந்திரன் மனைவி ஜோதி (57). இவா் கடந்த 20-
ஆம் தேதி இரவு குளிா் தாங்க முடியாமல் இரும்புத் தட்டில் தீ மூட்டம் போட்டு, காலின் அருகே வைத்துவிட்டு தூங்கியுள்ளாா். அப்போது ஜோதியின் உடையில் தீப்பற்றியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஜோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
