கள்ளக்குறிச்சி
லாட்டரி விற்பனை: ஒருவா் கைது
திருக்கோவிலூா் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருக்கோவிலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாவதி தலைமையிலான போலீஸாா் திருக்கோவிலூா் ஐந்துமுனை சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, அங்கு மொபட்டில் லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்தவரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைநடத்தினா். விசாரணையில் அவா் திருக்கோவிலூா் செவலை சாலையில் வசித்து வரும் மு.பீமன் (69) எனத் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பீமனைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 34 லாட்டரி சீட்டுகள், மொபட்டை பறிமுதல் செய்தனா்.
