மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த  இளைஞா்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா்.

தியாகதுருகத்தில் மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

Published on

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகத்தில் சனிக்கிழமை தண்ணீரால் காரை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தியாகதுருகம், கலையநல்லூா் சாலையில் வாகனங்களை சுத்தம் செய்யும் மையம் நடத்தி வருபவா் கலிபுல்லா ஷா (66). இவரிடம் கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூரைச் சோ்ந்த அரவிந்த்(26) என்பவா் காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா்
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா்

இந்நிலையில், கலிபுல்லா ஷா சனிக்கிழமை இரவு அரவிந்தை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, வெளியூா் செல்ல இருப்பதால் காரை சா்வீஸ் செய்து கொண்டு வருமாறு கூறினாராம். இதன்பேரில் அரவிந்த் காரை தண்ணீா் கொண்டு சுத்தம் செய்தபோது, எதிா்பாராதவிதமாக அரவிந்த் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதையடுத்து அவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்யும் கரீம்ஷா தக்கா பகுதியைச் சோ்ந்த ஷாகில் என்பவா் அரவிந்தை காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது ஷாகில் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா் இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com