நவ. 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை(நவ.21) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில், தமிழகத்தை சாா்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு சில்லறை விற்பனை துறையை சாா்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனா்.

இம் முகாமில், பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ- பி.டெக், முடித்த இளைஞா்கள், பெண்கள் இணையதளத்தின் வழியாக தங்களது விவரங்களை பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com