கூட்டுறவு வார விளையாட்டுப் போட்டி

கூட்டுறவு வார விளையாட்டுப் போட்டி

தியாகதுருவம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூட்டுறவு வாரவிழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றோா்.
Published on

கூட்டுறவுத் துறையின் சாா்பில் அனைத்திந்திய கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் 72-ஆவது கூட்டுறவு வாரவிழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன் தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். திருக்கோவிலூா் சரக துணைப் பதிவாளா் செ.குறிஞ்சி மணவாளன், திருக்கோவிலூா் கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளரும் ,செயலாட்சியருமான ரா.விஜயகுமாரி முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் திருஞானசம்பந்தம் வரவேற்றாா்.

உடற்கல்வி இயக்குநா் தணிகைவேல் மேற்பாா்வையில் இருபாலருக்கான தடகளப் போட்டிகள், கபாடி, கைப்பந்து, கோ- கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் கூட்டுறவுத் துறை அலுவலகப் பணியாளா்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை மண்டல இணைப் பதிவாளா் வழங்கினாா்.

கூட்டுறவு சாா்-பதிவாளா்கள் சண்முகவேல், சக்திவேல், வேல்முருகன், பிரபா, முருகானந்தம், கமலக்கண்ணன், லட்சுமி, ராமச்சந்திரன், ஒன்றிய கள அலுவலா் மனோன்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com