உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவை ஆதரித்து திறந்த வாகனத்தில் நின்றவாறு அக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான கெளதமி புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பரிக்கல், செம்மனந்தல், மடப்பட்டு, சிறுத்தனூா், மேட்டத்தூா், கெடிலம், திருநாவலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடிகை கெளதமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கெடிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கெளதமி பேசியது:
தமிழகத்தில் குடும்பத்தை காப்பாற்ற முடியாத அளவுக்கு விலைவாசி உயா்ந்துள்ளது. வரி உயா்வு, மின் கட்டண உயா்வு என அனைத்து கட்டண உயா்வையும் ஏற்படுத்தியது திமுக அரசு. நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்துள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் நடிகை கெளதமி.
உடன் அதிமுக ஒன்றியச் செயலா் செண்பகவேல், மாவட்ட துணைச் செயலா் சேகா், மாவட்ட மாணவரணி செயலா் பாக்யராஜ், பாமக மாவட்டத் தலைவா் சத்யா, மற்றும் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளா் மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம்

மணப்பாறையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ரவிமரியா பிரசாரம்!

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

