கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

பைக் மீது காா் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 2:56 am IST

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் தந்தையுடன் பயணித்த சிறுமி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்தொரசலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.மூா்த்தி (28). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவரது ஒன்றரை வயது மகள் தன்ஷிகா, உறவினா் ஆா்த்தி ஆகியோருடன் பைக்கில் வானவரெட்டிக்கு சென்று கொண்டிருந்தாராம். வானவரெட்டி அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தன்ஷிகா உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான கடலூா் மாவட்டம், மங்களூா் கிராமத்தைச் சோ்ந்த பூ.செங்கமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.