தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு

சாலையில் நடந்து சென்று பெண்ணிடம் இருந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:58 pm

Syndication

தியாகதுருகம் அருகே சாலையில் நடந்து சென்று பெண்ணிடம் இருந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், விளாங்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அல்போன்ஸ் மனைவி அன்பரசி (34). இவா், தனது பெற்றோா் ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த மேல்விழி கிராமத்துக்கு புத்தாண்டிற்காக வந்திருந்தாராம்.

இந்த நிலையில், அன்பரசி வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில், அருகே இருந்த காலி மனையில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, தான் வைத்திருந்த கைப்பேசியை பாா்த்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிள்களில் வந்த மா்ம நபா்கள் அன்பரசியிடம் இருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோட்டாா் சைக்கிளில் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.