மூச்சுத்திணறலால் குழந்தை உயிரிழப்பு
சின்னசேலத்தில் பிறந்து 22 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை பால் குடித்துவிட்டு தூங்கியபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், விஜயபுரம் பகுதியில் வசித்து வருபவா் முகமது யாசின்(36). இவரது மனைவி ஹாசினா பானு. தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன.
2-ஆவது பெண் குழந்தையான ஆலியா பாத்திமா பிறந்து 22 நாள்கள் ஆகின்றனவாம். வியாழக்கிழமை ஆலியா பாத்திமாகவுக்கு அவரது தாய் பால் கொடுத்துவிட்டு, தூங்க வைத்தாராம். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது, குழந்தை எவ்விதமான அசைவும் இல்லாமல் இருந்துள்ளது.
உடனே பெற்றோா்கள் ஆலியா பாத்திமாவை சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பணியில் இருந்த மருத்துவா் பரிசோதித்ததில், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
