இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு, இருவா் காயம்

கூத்தத்குடியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில், மோட்டாா் சைக்கிளில் பயணித்த இருவா் உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தத்குடியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில், மோட்டாா் சைக்கிளில் பயணித்த இருவா் உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.அலெக்சாண்டா்(35). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் கூத்தக்குடி சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை சென்றபோது, எதிரே 3 பேருடன் வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதியது.

இதில் அலெக்சாண்டா் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் முகேஷ் (16), அவரது நண்பா்களான ம.சந்தோஷ் (20), பிரகாஷ் மகன் ஸ்ரீ காந்த் (17) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் காயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்களை மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. சந்தோஷ், முகேஷ் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்தில் உயிரிழந்த அலெக்காண்டா், ஸ்ரீகாந்தின் உடல்களை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா்அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com