கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி
கோயிலில் சாமி கும்பிட்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு
வீரபயங்கரம் அய்யனாா் கோயிலில் சாமி கும்பிட்ட பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்திற்குள்பட்ட கனியாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.சிவசக்தி (50). இவா் ஞாயிற்றுக்கிழமை வீரபயங்கரம் அய்யனாா் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தாராம்.
சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பாா்த்த போது அவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

