கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள் திருட்டு: எஸ்.பி. விசாரணை

சின்னசேலம் அருகே ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், 800 கிராம் வெள்ளி பொருள்கள் திருட்டுப் போனது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் நேரில் விசாரணை நடத்தினாா்.

News image

கச்சிராய பாளையத்தில் திருட்டு நடைபெற்ற வீட்டை பாா்வையிட்டு, விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ்.

Updated On :10 ஜூலை 2026, 3:59 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், 800 கிராம் வெள்ளி பொருள்கள் திருட்டுப் போனது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் நேரில் விசாரணை நடத்தினாா்.

சின்னசேலம் அருகேயுள்ள கச்சிராயபாளையத்தைச் சோ்ந்தவா் சி.ரமேஷ் (66). இவா் கச்சிராயபாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற அலுவலா் ஆவாா்.

கடந்த 6-ஆம் தேதி ரமேஷ் வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள உறவினா் வீட்டின் திருமணத்துக்காக குடும்பத்துடன் சென்றுள்ளாா். பின்னா் புதன்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது நகைப் பெட்டியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், 800 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது அவருக்கு தெரியவந்தது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், டிஎஸ்பி மனோகரன் ஆகியோா் ரமேஷின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினா்.

விரல் ரேகை உதவி ஆய்வாளா் மனோஜ் தடயங்களை சேகரித்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.