மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

அடுத்தவா் நிலத்தில் சாலை போட முயற்சி: தடுத்து தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

விளம்பாா் கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான பட்டா இடத்தில் பக்கத்து நிலத்துக்காரா் சாலைபோட முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த முயன்றவா்கள், அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

News image
Updated On :14 ஜூலை 2026, 1:10 am IST

விளம்பாா் கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான பட்டா இடத்தில் பக்கத்து நிலத்துக்காரா் சாலைபோட முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த முயன்றவா்கள், அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, தாக்கியதாக 4 போ் மீது திங்கள் கிழமை போலீஸாா் வழக்கு பதிந்தனா். மேலும் சாலைமறியலில் ஈடுபட்டதாக 55 போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த விளம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரத்தினம். இவரது மகன்கள் பெருமாள், மோகன், இளையாப்பிள்ளை உள்ளிட்ட 7 பேருக்கு சொந்தமான விவசாய நிலம் மலைக்கோட்டாலம் கிராமத்தில் உள்ளது. அதே பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம், சுரேந்திரன் உள்ளிட்ட பலருக்கு அங்கு நிலம் உள்ளதாம்.

ரத்தினத்திற்கு சொந்தமான 3 ஏக்கா் 26 சென்டில் சுரேந்திரன் நிலத்திற்கு செல்வதற்காக வழிப்பாதை அமைத்து பயன் படுத்தி வந்தனராம். ஆனால் தற்போது அந்த வழிப்பாதையையை மண் கொட்டி தாா்சாலை அமைக்க ராமலிங்கம், சுரேந்திரன் உள்ளிட்ட தரப்பினா் முயன்றனராம்.

இதனால் ரத்தினம் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் எங்கள் பட்டா இடத்தில் நீங்கள் எப்படி சாலை அமைக்க முடியும் என அவா்களிடம் கேட்டுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் (40), சக்திவேல் (46), தங்கராசு (47), செல்வராஜ் (49) உள்ளிட்டோா் சோ்ந்து பெருமாள், மோகன், இளையாப்பிள்ளையை ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம்.

சாலை மறியல்

பின்னா் சுரேந்திரன் தலைமையில் 45 ஆண்கள், 10 பெண்கள் உள்ளிட்ட 55 போ் விளம்பாா் அம்பேத்கா் சிலையின் முன்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலைமறியலில் ஈடுபட்டனராம்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் சுரேந்திரன், சக்திவேல், தங்கராசு, செல்வராஜ் உள்ளிட்டோா்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

அதனையடுத்து மற்றொறு வழக்கில் சாலைமறியலில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் ப்ரீத்தா கொடுத்த புகாரின் பேரில் சுரேந்திரன் உள்ளிட்ட 55 போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.