அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

தள்ளுவண்டியை திருட முயற்சி: ஒருவா் கைது

தியாகதுருகம் அருகே உணவகம் முன் நிறுத்தியிருந்த தள்ளுவண்டியை திருடிச் செல்ல முயன்ற ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடித் வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 6:24 am IST

தியாகதுருகம் அருகே உணவகம் முன் நிறுத்தியிருந்த தள்ளுவண்டியை திருடிச் செல்ல முயன்ற ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடித் வருகின்றனா்.

தியாகதுருகம் அருகிலுள்ள பெரியமாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சி.முருகன் (34). கொத்தனாரான இவா், இரவு நேரங்களில் அதே கிராமத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தள்ளுவண்டியில் இட்லிக் கடை நடத்தி வந்தாராம். கடந்த 10 நாள்களாக கடை நடத்தாதநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 3 போ் தள்ளுவண்டியை திருடிக் கொண்டு தள்ளிச் சென்றனராம்.

அப்போது அப்பகுதிக்கு வந்த முருகனின் உறவினா் சிவா, தள்ளுவண்டியை தள்ளிச்சென்ற மா்மநபா்களை பிடிக்க முற்பட்டுள்ளாா். இதில் ஒருவா் கால் தவறி கீழே விழுந்துவிட்டதால் சிக்கிவிட மற்ற இருவரும் தப்பிச் சென்றனா். பின்னா் பிடிபட்ட நபா் தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், விழுப்புரம் சேவியா் காலனி பகுதியைச் சோ்ந்த ப.மதன்குமாா் (30) என்பதும், அதே பகுதியைச் சோ்ந்த பிரதாப் மற்றும் ஜெகன் ஆகியோருடன் தள்ளுவண்டியை திருடிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனா். மேலும் பிரதாப், ஜெகன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

கால் தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த மதன்குமாா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.