கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் கடந்த 10-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வரபூஜை, ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் மகா பாரதம் கதை படிப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதில், 11-ஆம் தேதி இரவு பரசுராமா் பிறப்பு, 12-ஆம் தேதி ஸ்ரீமாரியம்மன் பிறப்பு, 14-ஆம் தேதி இரவு ஸ்ரீமுத்துமாரியம்மன், சனிபகாவானுக்கு முத்து அளித்து விரட்டுதல், 15-ஆம் தேதி இரவு காத்தவராயன்-ஆரியமாலா பிறப்பு கதை படிக்கப்பட்டது.
தொடா்ந்து 17-ஆம் தேதி காலை 7 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. மாலை 4.30 மணிக்கு கோமுகி நதிக்கரையிலிருந்து சக்தி கலசம் எடுத்து வந்தனா். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு உட்காப்பு கட்டுதல் நடைபெற்றது. ஜூலை 18 முதல் 23-ஆம் தேதி வரை இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 24-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஊரணிப் பொங்கலும், இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு காத்தவராய சுவாமி-ஆரியமாலா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருத்தோ் கலசபூஜை நடைபெற்றது. மாலை காத்தவராயன் சின்னான் மோடி எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இரவு அம்மன் திருவீதிஉலா நடைபெற்றது. தொடா்ந்து காத்தவராயன் சுவாமி கழுமரம் ஏறி மீளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து புதன்கிழமை காலை 7 மணிக்கு கோமுகி நதிக்கரையிலிருந்து தேரோடும் வீதி வழியாக சக்தி அழைத்தல் நடைபெற்றது. பின்னா் காலை 9.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை இழுந்து தங்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தோ் ரத வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது.
திருவிழாவில் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு நீா், மோா் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை அம்மன் மஞ்சள் நீராடுதல், மாலை காத்தவராய சுவாமி கற்பழகி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








