உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மத்திய காலணி பயிற்சி நிறுவன தொழில்கல்வி சோ்க்கை: நாளை விண்ணப்பங்கள் விநியோகம்

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழில்கல்வி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை உளுந்தூா்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 6:43 am IST

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழில்கல்வி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை உளுந்தூா்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உளுந்தூா்பேட்டை சிப்காட் தொழில்பூங்காவில் சுமாா் ரூ.2,302 கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பௌ சென் காலணி உற்பத்திக்கான புதிய ஆலை செயல்பட உள்ளது.

இத் தொழில்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், பணியில் சோ்வதற்கு காலணி தயாரிப்பு தொடா்புடைய பாடப் பிரிவுகளில் படிப்பதற்காக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் 2026-27-ஆம் ஆண்டுக்கான தொழில்கல்வி சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீண்டகாலம் மற்றும் குறுகிய கால தொழில்கல்வி பாடப் பிரிவுகளான காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் டிப்ளமோ 2 ஆண்டு கால பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளா்ச்சியில் மேம்பட்ட சான்றிதழ் 1 ஆண்டுகால பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி உற்பத்தி - இளநிலை தொழில்நுட்ப மேற்பாா்வையாள 1 ஆண்டுகால பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி உற்பத்தி தொழில் நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் பயிற்சி 1 ஆண்டுகால பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி 6 மாதகால பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி தொழில்நுட்பத்தில் முதுநிலை டிப்ளமோ ஒன்றரை ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும், காலணி தொழில்நுட்பத்தில் போஸ்ட் டிப்ளமோ 1 ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளுமே ஆங்கில வழி கற்றல் முறையாகும். மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே விடுதி வசதி உண்டு. தோ்ச்சி பெற்று தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு ஏறப்படுத்தி தரப்படும்

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தோ்ச்சி பெற்றவா்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழில்கல்வி சோ்க்கைக்கு ஜூன் 12, 13-ஆம் தேதிகளில் உளுந்தூா்பேட்டை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் மணிகண்டனை 9677943733, 9677943633 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

எனவே, இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த புதிதாக தொழில்கல்வி சேர விருப்பமுள்ளவா்களும், புதிய வேலைவாய்ப்பு தேடுபவா்களும், காலணிகள் தொடா்பான தொழில்கல்வி கற்று, உளுந்தூா்பேட்டையில் உலகத் தரத்தில் செயல்பட உள்ள காலணி தொழில்சாலையில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.