கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வரஞ்சரம் அருகே பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:18 pm

வரஞ்சரம் அருகே பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டத்துக்குள்பட்ட சிறுநாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சா.இளையராஜா (33), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் கள்ளக்குறிச்சி சென்று விட்டு, பின்னா் வீட்டுக்கு திரும்பியுள்ளாா். நாகலூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, அங்கு சாலையில் உள்ள வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் இளையராஜா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.