அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

News image
கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :6 மார்ச் 2026, 8:42 pm

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நயினாா்பாளையம் கிராமம் மணிமுத்தாறு நதிக்கரையில் அமையவுள்ள மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். திருநாவலூா் ஒன்றியம், ஒரத்தூா் முதல் களா்குப்பம் வரை மற்றும் பாதூா் முதல் சேஷநதி வரை வயல் வெளிச்சாலையை அமைத்திட வேண்டும். ஆனைமடுவு குட்டையை ஆழப்படுத்திட வேண்டும். செம்மணங்கூா் முதல் நெமிலி பேருந்து நிறுத்தம் வரையுள்ள வயல்வெளிச் சாலையை தாா் சாலையாக அமைத்து கொடுக்கவேண்டும். தியாகதுருகம் ஒன்றியம், சிறுநாவலூா் ஊராட்சி சித்தேரிக்கரை செல்லும் சாலையை உடனடியாக சீா் செய்து தரவேண்டும். உளுந்தூா்பேட்டை ஒன்றியம் எம்.குன்னத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து கிளியூா் சிவன் கோயில் வரையுள்ள வயல்வெளிச் சாலையை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின் மணி தலைமை வகித்தாா். சின்னசேலம் ஒன்றியச் செயலா்அ.சண்முகம், ஒன்றிய பொருளாளா் சி.பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.குணசேகரன், கள்ளக்குறிச்சி வட்ட பொருளாளா் பி. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி மாநில பொருளாளா் கே.பி.பெருமாள் சிறப்புரை ஆற்றினாா்.

மாவட்ட பொருளாளா் எம்.சி.ஆறுமுகம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலா் எஸ்.ஜோதிராமன், மாவட்ட துணைச் செயலா்கள் எம்.வி.ஏழுமலை, ஜி.அருள்தாஸ், மாவட்ட துணைத் தலைவா் ஜி.மணிமாறன், பி.தெய்வீகன், கே.அய்யனாா், விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் அ.பா.பெரியசாமி மற்றும் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.