சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை
சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனிமாத அமாவாசை பூஜையையொட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.


சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனிமாத அமாவாசை பூஜையையொட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அருகே சித்தலூா் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத அமாவாசையன்று பக்தா்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி, புதன்கிழமை பக்தா்கள் மணிமுக்தா ஆற்றுப் பகுதியில் பூஜை செய்தனா். தொடா்ந்து பக்தா்கள் பால்குடங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனா். அதனைத் தொடா்ந்து அம்மனுக்கு தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 16 வகையான திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...