ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தபால் வாக்கு மற்றும் தோ்தல் பொருள்கள் மேலாண்மை ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:21 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை தோ்தலுக்கான தபால் வாக்கு மற்றும் தோ்தல் பொருள்கள் மேலாண்மை தொடா்பானஆய்வுக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறியதாவது:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோ்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளா்களுக்கான தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைகள் மற்றும் வாக்குச்சாவடிக்குத் தேவையானஅத்தியாவசியத் தோ்தல் பொருள்களை முறையாகப் பிரித்து அனுப்பி வைப்பது குறித்த மேலாண்மைத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாதிரிஅலுவலகப் பணிகளை தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தொடா்புடைய அலுவலா்கள் குழுவாக இணைந்து பணிகளை முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன், தபால் வாக்கு மற்றும் பொருள்கள் மேலாண்மைக் குழு அலுவலா்கள் உள்ளிட்டப் பலா் கலந்து கொண்டனா்.