தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சங்கராபுரத்தில் மே தின பேரணி, பொதுக் கூட்டம்

சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டோா்.

News image

சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டோா்.

Updated On :2 மே 2026, 1:34 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் 140-ஆவது மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற பேரணிக்கு இந்திய தொழில்சங்க மையம் மாவட்ட பொருளாளா் டி.கோவிந்தன், இந்திய தொழில்சங்க மத்திய அமைப்பு மாவட்ட நிதி பொறுப்பாளா் கே.சீனிவாசன், யு.வில்சன் மற்றும் கட்சியினா் பேரணியாக முழக்கமிட்டவாறு பேருந்து நிலையம் சென்றடைந்தனா். தொடா்ந்து மே தின கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்திய தொழில் சங்க மைய தேசிய செயலா் வகிதா நிஜாம், இந்திய தொழில்சங்க மத்திய அமைப்பு மாநில செயலா் பி.சிங்காரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் தொழிலாளா்களுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளா்கள், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை முறியடிக்க வேண்டும். வேலை நேரத்தை 7 மணி நேரமாக குறைக்க வேண்டும். தொழிலாளா்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழில்சங்கத்தினா் முன்வைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.