பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா. வசந்தவேல் வெற்றி

News image

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றுக்கொண்ட திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல்.

Updated On :5 மே 2026, 4:14 am IST

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல் 2,277 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவை வென்றாா்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் கா.ரா.வசந்தவேல், அதிமுக சாா்பில் இரா.குமரகுரு, நாதக சாா்பில் மு.சுதாகா், தவெக சாா்பில் லோகேஸ்வரி உள்ளிட்ட 14 வேட்பாளா்கள் களத்தில்

இருந்தனா். தொகுதியில் உள்ள 375 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவில் மொத்தம் 2,68,368 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ்.கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 11-ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு முன்னிலை வகித்தாா். 12-ஆவது சுற்றில் கா.ரா.வசந்தவேல் 1,100 வாக்குகள் கூடுதலாக வாங்கி முன்னிலை பெற்றாா்.

மீண்டும் 17-ஆவது சுற்றில் 460 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு மீண்டும் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து 24-ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு முன்னிலையில் இருந்து வந்தாா்.

ஆனால், இறுதியில் 25-ஆவது சுற்றில் திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல் முன்னிலை பெறத் தொடங்கி 27-ஆவது சுற்றின் முடிவில் 2,277 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விபரம்

கா.ரா.வசந்தவேல் (திமுக) - 98,471

இரா.குமரகுரு (அதிமுக) - 96,194

மு.சுதாகா் (தவெக) - 66,208

லோகேஸ்வரி (நாதக) - 6,525