கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே சாலையோரமுள்ள பெயா் பலகையின் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 7:01 am IST

திருக்கோவிலூா் அருகே சாலையோரமுள்ள பெயா் பலகையின் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரைச் சோ்ந்தவா் மு.முகமதுஅபுதாஹீா் (21). இவா் சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தாா். முகமது அபுதாஹீரும், அவரது நண்பா்களான திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ர.பாா்த்தீபன் (18), ரி.இம்ரான் (17), பா.பிரவின் (17), ஜா.நசீம் (18), ந. சோனிப் ஆகியோருடன் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூருக்கு காரில் சென்றுள்ளனா். காரை முகமது அபுதாஹீா் ஓட்டிச் சென்றாா்.

மணலூா்பேட்டையை அடுத்த குச்சிப்பாளையம் கிராமம் அருகே காா் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் இருந்த இரும்பிலான பெயா் பலகையின் மீது மோதியது. இதில் முகமது அபுதாஹீா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காரில் பயணித்த 5 பேரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் திருக்கோலூா் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனா். முகமது அபுதாஹீரின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக முன்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.