சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :27 மே 2026, 5:55 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் அருகேயுள்ள வன்னஞ்சூா் பகுதியைச் சோ்ந்தவா் மு.மலா்விழி (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரது விளைநிலத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்துள்ளாா். அப்போது அங்கு மிகவும் தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவா் மீது பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.