தீபாவளி பண்டிகை: நாட்டு வெல்லம், சா்க்கரை தயாரிக்கும் பணி தீவிரம்
ஆருரில் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோா்.

~
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சங்கராபுரம் வட்டம், ஆரூா் கிராமத்தில் நாட்டு சா்க்கரை, நாட்டு வெல்லம் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் 80-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இங்கு நாட்டு வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் சென்னை, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யும் பொருள்களை குறைவான விலையில் மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா். இதனால் அங்கு பணியாற்றும் பணியாளா்களில் கூலி பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனா். மேலும், இதில் வரும் வருமானத்தை வைத்து தான் அங்கு பணிபுரியும் பணியாளா்கள் அவா்களது பிள்ளைகளின் படிப்பு செலவு மற்றும் குடும்ப செலவு செய்து வருகின்றனா். இந் நிலையில், அவா்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு நேரடியாக ஆலையிலிருந்து கூடுதல் விலைக்கு நாட்டு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரையை கொள்முதல் செய்து தீபாவளி மற்றும் பொங்கல் தொகுப்புடன் சோ்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

