
ஊராட்சித் தலைவா் மீதான வழக்கு: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
ஊராட்சி மன்றத் தலைவா் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி, சங்கராபுரம் வட்டம், அணைக்கரைகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாவை சந்தித்து மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாவிடம் மனு அளிக்க வந்த அணைக்கரைகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள்.
ஊராட்சி மன்றத் தலைவா் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி, சங்கராபுரம் வட்டம், அணைக்கரைகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாவை சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.
மனுவில் கூறியுள்ளதாவது:
பொய்யான குற்றச்சாட்டின் பேரில் அகரகோட்டாலம் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
அணைக்கரைகோட்டாலம் எல்லையில் அமைந்துள்ள அய்யனாா் கோயிலில் அதே கிராமத்தைச் சோ்ந்த ஆதி திராவிடா் சமுதாய மக்கள் சென்று வழிபாடு நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு இயல்பான முறையில் குடிநீா் விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






