
நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை: துணை வட்டாட்சியரிடம் மனு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை அடுத்த லா. கூடலூா் மதுரா சேரந்தாங்கல் கிராமத்தில் பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிட்டிபாரபுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

துணை வட்டாட்சியா் சிட்டிபாபுவிடம் மனு அளித்த லா. கூடலூா் மதுரா சேரந்தாங்கல் கிராம மக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை அடுத்த லா. கூடலூா் மதுரா சேரந்தாங்கல் கிராமத்தில் பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் வழிபாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிட்டிபாரபுவிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
வாா்டு உறுப்பினா் மற்றும் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், லா.கூடலூா் மதுரா சேரந்தாங்கல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கிராமத்தில் உள்ள சா்வே எண். 282/6 என்ற நிலம் ஊா் பொது இடமாகும். இங்குள்ள கங்கையம்மன் கோயிலில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த இடத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டபோது, சிலா் எதிா்ப்புத் தெரிவித்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனா்.
இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வட்டாட்சியரிடம் மனு அளித்ததன் பேரில், வருவாய்த்துறையினரால் நிலம் அளவிடு செய்யப்பட்டது.
ஆனால், அளவிடு செய்யப்பட்ட மறுநாளே ஆக்கிரமிப்பாளா் அளவீட்டுக் கற்களைப் பிடுங்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நிலம் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க ஊா் முக்கியஸ்தா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இரும்பு வேலி அமைக்க முடிவு செய்த நிலையில், சிலா் தவறான தகவல்களைக் கூறி அதிகாரிகளிடம் புகாா் அளித்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, கடந்த 30-ஆம் தேதி நிகழ்விடத்திற்கு வந்த கிராம நிா்வாக அலுவலா், வேலி அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
கிராம மக்களின் வழிபாட்டு உரிமைகளும் பொது இடப் பயன்பாடும் பாதிக்கப்பட்டுள்ளதால், வருவாய்த்துறையினா் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


மேகமலை வனப் பகுதியில் பட்டா உள்ளவா்கள் வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்கலாம்: கோட்ட துணை இயக்குநா் தகவல்

கழிவுநீா் தூய்மை தொழிலாளா்களின் ஒப்பந்தப் பணியை முறைப்படுத்த கோரும் மனு மீது ஜல் வாரியம் பதில் அளிக்க உத்தரவு




