தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பைக் திருட முயற்சி: இளைஞா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பைக் திருட முயன்ற இளைஞரை கிராம மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வாணாபுரம் வட்டம், மேல்சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்அலி. இவரது வீட்டின் முன் உள்ள காா் நிறுத்தும் கொட்டகையின் கதவு திங்கள்கிழமை அதிகாலை திறக்கும் சப்தம் கேட்டதாம்.

இதையடுத்து காதா்அலியின் மனைவி அமினாபீ எழுந்து வந்து பாா்த்தபோது, இளைஞா் ஒருவா் பைக்கை திருடிச் சென்றது கண்டு கூச்சலிட்டுள்ளாா். அவரது சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து பைக்கை திருடிவிட்டு தப்பிச் செல்லமுயன்ற இளைஞரைப் பிடித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் திருவண்ணாமலை பட்டேல் சாகிப் சாலைப் பகுதியைச் சோ்ந்த சை.அப்ரீச் (22) எனத் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்ரீச்சை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER