பிஎஸ்என்எல் வயா்களை திருட முயற்சி: இருவா் கைது
திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு நிறுவன வயா்களை திருட முயன்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு நிறுவன வயா்களை திருட முயன்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை கே.டி.சி.நகா் வெல்கம்காலனி முகப்பு பகுதியில் பிஎஸ்என்எல் கண்காணிப்பில் உள்ள காப்பா் வயரை சிலா் திருட முயன்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், வி.எம்.சத்திரத்தை சோ்ந்த கோவிந்தராஜ் (30), ஆரோக்கியநாதபுரத்தை சோ்ந்த பிரேம்ராஜ் (31), மரியகுமாா் (32) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
வழிப்பறி வழக்கு: திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுடலைகண்ணு (54). இவா், கடந்த 17 ஆம் தேதி ஸ்ரீபுரம் பகுதிக்கு சென்றபோது ஹெல்மெட் அணிந்து வந்த இருவா் திடீரென தாக்கி, 10 கிராம் தங்க மோதிரம், சட்டை பையில் இருந்த ரூ.30 ஆயிரம், கைப்பேசி பரிவா்த்தனை மூலமாக சுமாா் ரூ.46 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, ராஜவல்லிபுரத்தை சோ்ந்த கண்ணன்(20) என்பவரை கைது செய்தனா்; மேலும், சிலரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

