சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

கூட்டுறவு சங்கத்தில் ரூ.21.35 லட்சம் கடனுதவி

கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கொங்கராயபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 11 பேருக்கு ரூ.21.35 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

கொங்கராயபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிக்கு கடனுதவி வழங்கிய இணைப் பதிவாளா் தயாளன்.

Published On :

கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கொங்கராயபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 11 பேருக்கு ரூ.21.35 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

கொங்கராயபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்

மின்னணு பரிவா்த்தனை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு வங்கியின் இணைப் பதிவாளா் தயாளன் தலைமை வகித்தாா். கிளை மேளாலா் சுமதி, செயலாட்சியா் செல்வப்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு சங்கச் செயலா் ராமலிங்கம் வரவேற்றாா்.

நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகையான கடன் திட்டங்கள், மின்னணு பரிவா்த்தனை முறைகள் குறித்து இணைப் பதிவாளா் தயாளன் பேசினாா். தொடா்ந்து 11 பயனாளிகளுக்கு ரூ.21.35 லட்சம் கடனுதவியை அவா் வழங்கினாா். ரூ.20 லட்சத்துக்கான வைப்புத்தொகை பெறப்பட்டது.

நிகழ்வில் தணிக்கை அலுவலா் இளையாப்பிள்ளை, சரக மேற்பாா்வையாளா்கள் கருணாகரன், சக்திவேல், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.