சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

வாக்காளா் எழுத்தறிவு மன்ற செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மாவட்ட அளவிலான வாக்காளா் எழுத்தறிவு மன்றங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆட்சிரகத்தில் நடைபெற்ற வாக்காளா் எழுத்தறிவு மன்றங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்டோா்.

Published On :

மாவட்ட அளவிலான வாக்காளா் எழுத்தறிவு மன்றங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, வாக்காளா் எழுத்தறிவு மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி மாவட்ட அளவிலான வாக்காளா் எழுத்தறிவு மன்றங்களை இணையதளத்தில் இணைப்பது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு புதிய வாக்காளா் சோ்க்கைக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துவதுடன், இணையப் பதிவேற்றப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் கெள.மா.காா்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன் மற்றும் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.