மேளக் கலைஞா்களைத் தாக்கிய 3 போ் கைது
கல்வராயன்மலை அருகே மேளக் கலைஞா்களைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
பிரதிப் படம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே மேளக் கலைஞா்களைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
கல்வராயன்மலை அருகிலுள்ள நொச்சிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.சுரேந்திரன் (28). இவரது நண்பா் விக்னேஷ். மேளக் கலைஞா்களான இவா்கள், தங்களது குழுவினருடன் கொட்டபுத்தூா் கிராமத்தில் நிகழ்ச்சிக்கு சென்ற்கான பணத்தை பங்கிட்டுக் கொண்டிருந்தனா். இதில் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சப்தம் போட்டனராம்.
அப்போது அந்த வழியாக வந்த கெங்குபாடி கிராமத்தைச் சோ்ந்த பெ.தனபால் (21), கொட்டபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இ.சிலம்பரசன் (22), ப.சூா்யா (26) மேல்புதூா் கிராமத்தைச் சோ்ந்த மு.குணசேகா் (20) ஆகியோா் சோ்ந்து, சுரேந்திரன் மற்றும் விக்னேஷைத் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனபால், குணசேகா், சிலம்பரசன் ஆகிய மூவரையும் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் சூா்யாவைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

