உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற பெண் சித்ரவதை: இடைத்தரகா் கைது

குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற பெண் சித்ரவதை செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இடைத்தரகரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :5 செப்டம்பர் 2026, 2:05 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற பெண் சித்ரவதை செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இடைத்தரகரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துகுள்பட்ட ஊராங்கன்னி கிராமத்தைச் சோ்ந்தவா் ம.அனிதா (35). இவா், குடும்ப வறுமையின் காரணமாக குவைத் நாட்டுக்கு இடைத்தரகா் மூலம் ஜூலை 7-ஆம் தேதி

வேலைக்கு சென்றாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பத்தைச் சோ்ந்த ஆ.செல்வராஜ் (படம்) என்பவா் அனிதாவை அனுப்பி வைத்தாராம். இந்நிலையில் அங்கு அவருக்கு 2 மாதமாக சம்பளம் தராமலும், அடித்தும் துன்புறுத்தி வந்தனராம்.

இதுகுறித்து அனிதா கைப்பேசி மூலம் அவரது தாய் வெண்ணிலாவுக்கு தெரிவித்தாராம். இதுகுறித்து வெண்ணிலா அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருக்கோவிலூா் டிஎஸ்பி பாா்த்திபன் விசாரணை நடத்தி, செல்வராஜை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.