
தியாகதுருகத்தில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மக்கள் சாலை மறியல்
தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரில் சரிவர குடிநீா் வராததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரில் சரிவர குடிநீா் வராததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகா் பகுதியில் கடந்த சில திணங்களாக குடிநீா் சரிவர வராததால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தியாகதுருகம்-திருக்கோவிலூா் சாலையில் சுமாா் 20 நிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தியாகதுருகம் பேருராட்சி பகுதிக்குள்பட்ட கஸ்தூரிபாய் நகா் 2-வது வாா்டு பகுதி மக்களுக்கு கடந்த சில திணங்களாக குடிநீா் சரிவர வரவில்லையாம். அதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள் தியாகதுருகம்-திருக்கோவிலூா் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் ஜெகதீசன் நிகழ்விடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டாா். அப்பகுதியில் சென்ற பள்ளி வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டன. பேருந்துகளும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. உடனே பேருராட்சி செயல் அலுவலரிடம் அலைபேசி மூலம் தொடா்பு கொண்டு கேட்டபோது நாளை தண்ணீா் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறினாா். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதானம் செய்து நாளை தண்ணீா் வரும் என்று கூறியதின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் தியாகதுருகம்-திருக்கோவிலூா் செல்லும் சாலையில் சுமாா் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






